‘என்னை அப்படி கூப்பிடாதீங்க’.. ரசிகருக்கு அன்பு கட்டளையிட்ட அஜித் !

ajith

ரசிகர் ஒருவருக்கு நடிகர் அஜித் சொன்ன ஒரு விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக் கொண்ட செயல்பட்டு வருபவர் நடிகர் அஜித். ரசிகர் மன்றம், புகழ்ச்சி என ஒரு ஆளுமைக்கு தேவையான எதையும் விரும்பாத மனிதராக அஜித் இருந்து வருகிறார். அதனால் தான் இன்றைக்கும் அவர் வியக்கத்தக்க மனிதராக இருந்து வருகிறார். 

ajith

இதற்கிடையே எச் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது ப்ரோமோ பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெற உள்ளது. 

சென்னையில் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துக்கொண்டுள்ளார். இந்த படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் ரசிகர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அஜித் பார்த்த ரசிகர்கள் உங்களை பார்க்க தான் வந்திருக்கிறேன் சார் என்று கூறியுள்ளனர். இதை கேட்ட அஜித் என்னை சார் என்று சொல்ல வேண்டாம்.. அண்ணா என்று கூப்பிடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். 

 

Share this story