கர்ப்பமே ஆகல.. அதுக்குள்ள கல்யாணமா ?.. டாப்சி பதிலால் அதிர்ந்த ரசிகர் !

taapsee pannu

ரசிகரின் கேள்விக்கு நடிகை டாப்ஸி நெத்தியடி பதிலடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. தமிழில் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதன்பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

அதன்பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் பாலிவுட் சென்ற அவர், பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சபாஷ் மித்து’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

taapsee pannu

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஏலியன்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக நடிகையாக இருக்கும் அவர், ரசிகர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் பேசும் போது எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் ஒருவர் எழுப்பியுள்ளார். 

அதற்கு நான் இன்னும் கப்பமாகவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது. திருமணம் நிச்சயமாகும் போது உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன் என்று கூலாக பதிலளித்துள்ளார். டாப்ஸியின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பேட் மிட்டன் பயிற்சியாளர் மதியாஸ் போ என்பவரை கடந்த சில ஆண்டுகளாக டாப்ஸி காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story