படத்தை பார்த்துவிட்டு குறை சொல்லுங்க' - 'ஃபர்ஹானா' இயக்குனர் வேண்டுகோள் !

farhana

'ஃபர்ஹானா' படத்தை பார்த்துவிட்டு குறை சொல்லுங்கள் என படத்தின் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இஸ்லாமியா பெண்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்களது உரிமைகள் குறித்தும் பேசும் படமாக 'ஃபர்ஹானா' திரைப்படம் உருவாகியுள்ளது. பெண்களை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளார். 

farhana

'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையொட்டி இன்று இயக்குனர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த படத்தில் இஸ்லாமிய சகோதரர்களை இம்மியளவும் தவறாக காட்டி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் அப்படிப்பட்ட இயக்குனர் நான் கிடையாது. குறிப்பிட்ட திரையரங்கில் மட்டும் நேற்று ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டது. அதை வைத்து படத்தையே தடை செய்வது போன்று பேசுவது நியாயம் இல்லை‌ என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், இஸ்லாமிய சகோதரர்கள் தயவு செய்து படத்தை பாருங்கள். அதன் பிறகு ஏதேனும் குறை இருந்தால் அதை சரி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் திரையுலகில் இனி இஸ்லாமிய சகோதரர்களை சரியாக சித்தரிக்கும் திரைப்படங்கள் வர வேண்டும். அதற்கு ஆரம்பமாக 'ஃபர்ஹானா' திரைப்படம்  இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்ற தெரிவித்தார். 

 

 

Share this story