ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் பெற்ற சென்சார் சான்றிதழ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் எப்பொழுதும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தகதை, பெண்மைய்ய கதாபாத்திரம் கொண்ட கதைகளையே அதிகமாக தேர்வு செய்து நடிப்பார், அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இதுவரை ஐஸ்வர்யா ராஜேச் நடித்திடாத தோற்றத்தில் ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தில் நடிக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை கலக்கிய நிலையில், தற்போது படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற வித்தியாசமான கதைகள் மூலமாக மக்களை ஈர்த்த இயக்குநர் வெங்கடேசன் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் ‘பர்ஹானா’ படத்தின் சென்சார்தகவல் வெளியாகியுள்ளது, அதாவது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என் எதிர்பார்க்கலாம்.