'பயர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

fire

பாலாஜி முருகதாஸ் நடித்துள்ள 'பயர்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படம் 2020 ஆம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன்.இக்கதாப்பாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார்.fire


இவருடன் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில், இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பிரபல நிறுவனமான 'டென்ட்கொட்ட' ஓ.டி.டி தளம் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மார்ச் 14ஆம் தேதி 'பயர்' படம் 'டென்ட்கொட்ட' தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story