‘யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது…”- வெளியானது ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர்.

photo

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃபைட் கிளப்’, இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 லோகேஷ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் முதல் படத்தை அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்குகிறார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். உறியடி விஜய்குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். சமீபத்தின் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க சண்டையை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் டீசரில், “ நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது….யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது…” போன்ற வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளது. ஃபைட் கிளப் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story