தனுஷ் படத்துடன் எத்தனை படங்கள் போட்டி போடுகிறது தெரியுமா ?

kubera
தனுஷ் நடித்துள்ள குபேரா படம் வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது .இதன் ட்ரைலர் கூட வெளிவந்துவிட்டது .அந்த படத்துடன் எந்தெந்த படங்கள் போட்டி போடுகின்றன என்று இப்பதிவில் காணலாம் 
தனுஷ் நடித்துள்ள குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நாகர்ஜுனா, தனுஷ், , ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து ஸ்டேஜில் வைத்து குபேரா படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டது 
தனுஷின் குபேரா படத்துக்கு போட்டியாக அதர்வாவின் டிஎன்ஏ படம் திரைக்கு வருகிறது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.அடுத்து விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள திரைப்படம் தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர். இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஜூன் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Share this story