நடிகர் கார்த்தி கைவசம் எத்தனை படங்கள் தெரியுமா ?
1778725812000
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், மீனாட்சி சவுத்ரி. தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் நடித்திருந்த அவர், தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் புதிய படத்தில் கார்த்தி ேஜாடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதை கல்யாண் சங்கர் இயக்குகிறார்.
தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது.காமெடி வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். தமிழில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’, ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ ஆகிய படங்களில் நடித்து வரும் கார்த்தி, இப்படங்களை முடித்த பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி 2’ படத்திலும் நடிக்கிறார்