2024-ஆம் ஆண்டில் பான் இந்தியா அளவில் தோல்வியை சந்தித்த படங்கள்!
இந்த ஆண்டு pan-India படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், பான் இந்தியா தரத்தில் பிக் பட்ஜட்டில் வெளியான பல படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படி தோல்வியை கண்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஒரே ஒரு மொழியில் எடுக்கப்படும் படங்களை விட, பான் - இந்தியா அளவில் படம் இயக்குவது மிகவும் சவால் நிறைந்த ஒன்று என கூறலாம். ஒரு மொழியில் படம் எடுக்கும் போது, அது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, என அந்தந்த மொழியை சேர்ந்த ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக இருக்கும். ஆனால் பான் இந்தியா படம் என்பது ஒருத்தரப்பை மட்டுமே சாராமல் அணைத்து தரப்பு ரசிகர்களையும்.. அணைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாக வேண்டும்.
அதே போல் பான் -இந்தியா மொழி நடிகர்கள், தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமான ஒருவராக இருக்க வேண்டும். பிரபலமாகாத ஒரு நடிகர் மற்ற மொழி ரசிகர்களால் ரசிக்கப்பட்டால் அது அதிஷ்டத்தை வசமே. இந்த ஆண்டு பான் - இந்தியா திரைப்படமாக வெளியாகி தோல்வியை தழுவிய திரைப்படங்களை பார்ப்போம்.
இந்த ஆண்டு வெளியான pan-India தோல்வி படங்களில் ஒரு, கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாக வெற்றிக்கு பின்னர் வெளியான இரண்டாம் பாகம் ஏனோ அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர தவறி விட்டது. இவ்வளவு ஏன், தமிழிலேயே இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் தளபதியின் நிலையும் இதேதான். ஒருபுறம் அரசியல், மறுபுறம் சினிமா என பிஸியாக இருக்கும் விஜய், இந்த ஆண்டு தி GOAT படத்தில் நடித்திருந்தார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், வசூல் ரீதியாக படுதோல்வியை சந்திக்கவில்லை என்றாலும், பான் - இந்தியா அளவில் இந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் தோல்வியை சந்தித்தது.
pan-India அளவில் வெளியாகி 2000 கோடி வசூல் செய்யும் என மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, 150 கோடி வசூல் மட்டுமே ஈட்டி, டிசாஸ்டர் தோல்வியை சந்தித்த திரைப்படம் தான் இயக்குனர் சிறுத்தை சிவா - சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா'. பான் இந்தியா அளவில் வெளியாகி, ரசிகர்களை இந்த படம் ஏமாற்றத்தில் தள்ளியது.
அதே போல் பான் - இந்தியா தரத்தில், ரியல் KGF என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் விக்ரம் நடித்த தங்கலான். நடிகர் விக்ரம் ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறி, இந்த படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படம், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. காட்சிகள் மற்றும் நடிகர்களை உழைப்பு நேர்த்தியாக இருந்த அளவுக்கு கதை இல்லாமல் போனதே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.