சிறுமலையில் விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்
வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்கியிருந்த திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மக்களுக்கான போராடுகிற பெருமாள் வாத்தியரை உயிரோடவோ, பிணமாகவோ பிடிக்க போலீஸ் நடத்துற ஆபரேஷன் தான் விடுதலை. இருபாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னரே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தற்போது விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் 32 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. மேலும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மஞ்சு வாரியர், இதுவரை ஒரு நாள் கூட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.