ஒரு வழியாக 'மதகதராஜா' படம் வெளியாகும் மாதம் அறிவிப்பு..!

1

 சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் தான் மதகதராஜா. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தார்கள். இதற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

2013ஆம் ஆண்டு ரிலீஸுக்கு தயாரான இந்த படம் பலமுறை வெளியாகும் என அறிவித்தும் இன்று வரை வெளியாகாமல் இருந்தது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சுமார் 11 ஆண்டுகள் கழித்து மதகதராஜா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

Share this story