பிரபல பாடகரின் குடியிருப்பில் தீ விபத்து
இந்தியாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி புகழ்பெற்றவர் உதித் நாராயண். இவர் மும்பை அந்தேரி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த சூழலில் அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உதித் நாராயனின் பக்கத்து வீட்டுக்காரரான ராகுல் மிஸ்ரா என்பவர் சிக்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது செல்லும் வழியிலே உயிரிழந்து விட்டார். இன்னும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்தின் போது உதித் நாரயண் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.