சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா ?

sorgavasal

நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். முதல் படமே ஹீரோவாக மாபெரும் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, இந்த இரண்டு படங்களையும், சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியிருந்தார். ஹீரோ மற்றும் இயக்குனர் என கலக்கிக்கொண்டிருக்கும் பாலாஜி, அடுத்ததாக சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நகைச்சுவையில் பட்டையை கிளப்பி கொண்டிருந்த ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் படத்தின் மூலம், தன்னால் சீரியஸான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியும் என காட்டியுள்ளார். இதற்கு முன் எந்த படத்திலும் பார்த்திராத பாலாஜியை சொர்க்கவாசல் படத்தில் பார்க்க முடிந்தது. 

நேற்று வெளிவந்த சொர்க்கவாசல் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கிய இப்படத்தில் பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், கருணாஸ், சானியா அய்யப்பன், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், சொர்க்கவாசல் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Share this story