அனபெல் சேதுபதி... விஜய் சேதுபதி, டாப்ஸி கூட்டணியின் ஹாரர் காமெடி... பர்ஸ்ட் லுக் & ட்ரைலர் அப்டேட்!

டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் அப்டேட் கிடைத்துள்ளது.
பிரபல தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இருவரும் புதிய படத்தில் நடித்துள்ளனர். அந்தப் படத்திற்கு அனபெல் சேதுபதி என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ராதிகா, சுப்பு பஞ்சு, மதுமிதா, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படம் ஹாரர் காமெடி படமாக உருவாக இருப்பதாகவும், படத்தின் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புதன்கிழமை அன்றும் ட்ரைலர் வெள்ளிக்கிழமை அன்றும் வெளியாகலாம் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தப் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாகா ஓடிடி-யில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்!