லிஜோமோல் ஜோஸ் நடித்த காதல் என்பது பொதுவுடைமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

லிஜோமோல் ஜோஸ் நடித்த காதல் என்பது பொதுவுடைமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆனது.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் லிஜோமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல்பாடலான தீயாய் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.