புளூ ஸ்டார் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியீடு

புளூ ஸ்டார் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியீடு

அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் புளூ ஸ்டார் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகிறது. 

புளூ ஸ்டார் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியீடு

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'புளூ ஸ்டார்' படத்திலிருந்து ரெயிலின் ஒலிகள் என்ற முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

Share this story