கேம் சேஞ்சர் படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ்

கேம் சேஞ்சர் படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு வெளியீடு

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாலிருட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கேம் சேஞ்சர் படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு வெளியீடு

இந்நிலையில், படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Share this story