மங்கை படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்
1708000987817

கயல் ஆனந்தி, ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அந்த கார் விபத்துக்குள்ளாகி ஒரு வயதான பெண் காயம் அடைந்து விடுகிறார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி காரணமாக கயல் ஆனந்தி கேரக்டர் டேமேஜ் செய்யப்படுகிறது. அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், மீள முடியாத சிக்கல்கள், ஊடகங்களில் பதிவு செய்யப்படும் பொய்யான செய்திகள் ,இதனால் பாதிக்கப்படும் கயல் ஆனந்தி அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. இந்த படத்தை குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ஏலம்மா எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.