உலகிலேயே முதல் முறை... கார் கான்வாய் மூலம் விடாமுயற்சி படத்திற்கு புரோமோஷன்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம். "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
The streets in Malaysia went ablaze! 🇲🇾 The first-ever Car Convoy Promotion for VIDAAMUYARCHI 🔥 turned heads and raised the hype to new heights! 🚗💨✨
— Lyca Productions (@LycaProductions) January 30, 2025
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni… pic.twitter.com/jmkhgESkhs
விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், விடாமுயற்சி டிரெய்லரின் பி.டி.எஸ். வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பி.டி.எஸ். வீடியோவைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், முதல் முறையாக கார் கான்வாய் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதற்காக மலேசிய வீதிகளில் வலம் வந்த ஏராளமான கார்களில் விடாமுயற்சி படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டது. பின்னர் படத்தின் போஸ்டருடன் கார் கான்வாய் சாலைகளில் வலம்வந்தன. இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியாக இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.