இயக்குனர் ராஜமவுலி மீது முன்னாள் நண்பர் பகீர் குற்றசாட்டு...!

rajamouli

இயக்குனர் ராஜமவுலி மீது முன்னாள் நண்பர்  ஸ்ரீனிவாஸ் ராவ் பகீர் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். 

 தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.எஸ்.எம்.பி 29 எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜமவுலியின் முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ், ராஜமவுலியின் டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். 1990 முதல் ராஜமௌலியை அறிந்திருப்பதாகவும், தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நபர்களுக்கு இடையேயான காதல் பிரச்சனையே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "55 வயதாகும் நான் இன்னும் திருமணம் செய்யாமல் தனி ஆளாக இருக்கிறேன். அதற்கு ராஜமவுலிதான் காரணம். நான் ராஜமவுலியுடன் 'எமதொங்கா' படம் வரை நல்ல நட்புறவில் இருதேன். எங்களது இந்த நட்பில் ஒரு பெண் குறுக்கிடுவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு பெண்ணுக்காக என் வாழ்க்கையை அழித்து விட்டார் ராஜமவுலி. என்னுடைய தற்கொலைக்கு காரணம் என்றால் அது ராஜமவுலியும் அவரது மனைவி ரமா இருவரும்தான்." என்று கூறியுள்ளார். இது குறித்து ராஜமவுலி தரப்பிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.


 

Share this story