‘ப்ரெண்ட்ஸ்‘ பட இயக்குனர் சித்திக் மரணம்... அதிர்ச்சியில் மலையாள திரையுலகம் !

Siddique

நடிகர் விஜய்க்கு பல படங்களை ஹிட் கொடுத்த இயக்குனர் சித்திக் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். 

மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் சித்திக். மலையாளத்தை தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கினார்.

Siddique

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வடிவேலுவின் புகழ்பெற்ற காண்ட்ராக்டர் நேசமணி காமெடி காட்சி இந்த படத்தில்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு நேரத்தில் வில்லு, சுறா என தொடர்ந்து தோல்விகளை சந்தித்த விஜய்க்கு ‘காவலன்‘ படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தது இயக்குனர் சித்திக் தான்.

இந்நிலையில் திடீரென நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்துள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

Share this story