பிரம்மாண்ட இயக்குனருக்கு பிறந்தநாள்... சர்ப்ரைஸ் கொடுத்த ராம் சரண் !

shankar

இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை ‘கேம் சேஞ்சர்’ குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படுபவர் இயக்குனர் ஷங்கர். புதிய தொழில்நுட்பங்களை தனது படங்களில் புகுத்தி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார். எப்போதும் தனது படங்களில் பிரம்மாண்ட காட்சிகளை கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். 

shankar

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஷங்கர், தனது 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ‘கேம் சேஞ்சர்’ குழுவினர் ஷங்கருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வில் நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

shankar

சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கர், ‘வசந்தராகம்’, ‘சீதா’ உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர ஜீன்ஸ், அந்நியன், இந்தியன், நண்பன், எந்திரன், முதல்வன், 2.O என தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வந்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story