கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ; பவன் கல்யாணுக்கு அழைப்பு

pawan kalyan

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. pawan

இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256அடி உயரமுள்ள பிரம்மாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாணுக்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். இதனை பட தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனால் நிகழ்ச்சிக்கு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story