கேம் சேஞ்சர் படப்பிடிப்பு ரத்து...அடுத்த மாதம் தொடக்கம்...
1695632135179

நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.
தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடக்க வேண்டியிருந்தது. ஆனால், பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. சில நடிகர்களின் தேதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இதனால், படப்பிடிப்பை அடுத்த மாதம் தள்ளி வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.