இசையமைப்பாளர் தமனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த 'கேம் சேஞ்சர்' படக்குழு
ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள தமனின் இசை சிறப்பாக அமைந்துள்ளது என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
Happy Birthday captain @MusicThaman ❤️🔥✊🏼 here's to a blockbuster album from you.
— Game Changer (@GameChangerOffl) November 16, 2024
May you continue to light up the speakers with foot-tapping melodies 😉🎧#HappyBirthdayThaman #HBDThaman #GameChanger pic.twitter.com/ly28dRNoDF
இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் இன்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து 'கேம் சேஞ்சர்' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் 'பிறந்த நாள் வாழ்த்துகள் கேப்டன்' என்று பதிவிட்டுள்ளனர். மேலும் தமன், பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.