'கேம் சேஞ்சர்’ பட டிரைலர் நாளை ரிலீஸ்..
கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசை அமைக்கிறார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா,
அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலியும் மகன் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்திருக்கிறார்களாம்.
அரசியல் கலந்த கதைக்களத்தில் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 2) மாலை 5.04 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.