‘டாடா’ இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜீவா.. பிரபல நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் !

jeeva

‘டாடா’ படத்தின் இயக்குனர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான ‘டாடா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கவின் கதாநாயகனாகவும்,  மலையாள நடிகை அபர்ணா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

jeeva

நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படத்திற்கு கணேஷ் பாபு அடுத்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்படிப்பு தொடங்கவுள்ளது. 

jeeva

இந்த படத்திற்கு நடிகர் ஜீவாவை வைத்து புதிய படம் ஒன்றை கணேஷ் பாபு இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பா.விஜய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஜீவா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story