அஜித் உடன் உடன் கங்கை அமரன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு!
நடிகர் அஜித்துடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் இருக்கும் போட்டோவை இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் வெங்கட்பிரபு. இவர் இயக்குநர் மட்டுமில்லாமல் நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து, இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார்.
❤️❤️❤️ this happened……. pic.twitter.com/740UoK8bmG
— venkat prabhu (@vp_offl) August 30, 2024
மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். இதுவரை இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் கோட் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
கோட் ஒரு நல்ல ஆக்சன் பிளாக் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும் என தெரிகிறது. அதோடு ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு கோட் படத்தின் ட்ரைலரை பார்த்து அஜித் பாராட்டி இருந்ததாக வெங்கட் பிரபு சொல்லி இருந்தார்.
இதை அடுத்து ரசிகர்கள் விஜய்யின் கோட் -அஜித்தின் மங்காத்தா படத்தை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு, கோட் படம் மங்காத்தா மாதிரியான ஒரு படமாகத்தான் இருக்கும். ஆனால், மங்காத்தா படத்தில் எமோஷன் இருக்காது.கோட் படத்தில் ஏமோஷன் இருக்கும். கோட் எந்த மாதிரியான படம் என்று ட்ரைலரில் சொல்லியிருக்கிறோம். ஆனால், அதை சரியாக டீகோட் செய்யவில்லை. இந்த படம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியம், எளிதில் கண்டுபிடிக்க முடியாத ட்விஸ்ட்கள் வைத்திருக்கிறோம். மங்காத்தா படம் போல இந்த படமும் வேகமாக தான் போகும். காந்தி என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை காட்டும் படமாக கோட் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித்துடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் இருக்கும் போட்டோவை இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.