`கேங்கர்ஸ்' பட டிரெய்லர் ரிலீஸ்

சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
'அரண்மனை 4’ மற்றும் மதகஜராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். மேலும், நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே, வடிவேலுவை வைத்து ‘கேங்கர்ஸ்’ என்னும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி. இதில் கேத்ரீன் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#Gangers - Vadivelu..🔥 Looks Superb as a Comedian after a Long time.. 👌 Gonna be a Sureshot at the Box Office for this Summer..⭐ pic.twitter.com/bu3CFyGQEL
— Laxmi Kanth (@iammoviebuff007) April 1, 2025
காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக உருவாகியுள்ளது. சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து பல நூறு கோடி ரூபாயை ஒரு இடத்தில் இருந்து திருட திட்டமிட்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் வடிவேலு பல கெடப்புகளில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.