இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கங்குவா திரைப்படம்... இடைவிடாமல் படப்பிடிப்பு...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கங்குவா திரைப்படம்... இடைவிடாமல் படப்பிடிப்பு...

சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவன் தயாரிக்கும் இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாகவும், 3D அனிமேஷனில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாகவும் உருவாகி வருகிறது. 

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், 25 நாட்களுக்கு இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Share this story