கங்குவா : 'மன்னிப்பு' பாடலின் புரோமோ வெளியீடு
1730962936289
நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகியது.இத்திரைப்படம் வருகிற 14-ந் தேதி வெளியாகும் என கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதற்கிடையில் படக்குழுவினர் மும்பை, புதுடெல்லி, கொச்சி போன்ற இடங்களில் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலாகியது. இப்படம் வெளியாக இன்னும் சரியாக 7 நாட்கள் உள்ளன. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இன்று மாலை 6 மணியளவில் 'மன்னிப்பு' என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு படக்குழுவினர் இப்பாடலின் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.