நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த கங்குவா பட ஒளிப்பதிவாளர்

நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த கங்குவா பட ஒளிப்பதிவாளர்

எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் படத்திற்கு இசை அமைக்கிறார். இயக்குநர் சிறுத்தை சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த கங்குவா பட ஒளிப்பதிவாளர்

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, ஒளிப்பதிவாளர் வெற்றியின் பிறந்தநாளை படக்குழுவினர் விமரிசையாக கொண்டாடியுள்ளனர். சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து வெற்றி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த கங்குவா பட ஒளிப்பதிவாளர்

பத்து மொழிகளில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

Share this story