“ராஜா வருகிறார்” - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘கங்குவா’.. சூப்பரான போஸ்டர் வெளியீடு !

kanguva

‘ராஜா வருகிறார்’ என்ற பெயரில் ‘கங்குவா’ படத்தின் கிளம்ப்ஸ் வீடியோவிற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் திரை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக உருவாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த படத்தில் நடிகர் சூர்யா 5 தோற்றத்தில் நடித்து வருகிறார். வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை 3டியில் ரசிகர்கள் காணலாம். 

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார். யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.

kanguva

ஏற்கனவே இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது. தற்போது இந்த படத்தின் ப்ரீயட் தொடர்பான காட்சிகள் கொடைக்கானல் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. சரித்திர படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டரை மணி மேக்கப் போடுகிறாராம் சூர்யா. அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு என்பதால் சூர்யா மற்றும் படக்குழுவினர் சில கிலோமீட்டர் நடந்து சென்று ஷூட்டிங்கில் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது பிறந்தநாளை வரும் 23-ஆம் தேதி கொண்டாடும் நிலையில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ராஜா வருகிறார் என்ற பெயரில் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ‘கங்குவா’ படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story