கங்குவா ஒலிக்கலவை விமர்சனம் : படக்குழு எடுத்த அதிரடி முடிவு
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(14.11.2024) பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, கே.எஸ் ரவிகுமார், கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக படம் முழுக்க அதிகமாக சத்தம் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர், “பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
#BREAKING || ``காதில் ரத்தம் வராத குறைதான்’’ காலையில் இருந்து தெறித்த விமர்சனங்கள்.. சட்டென முடிவெடுத்த `கங்குவா’ படக்குழு#kanguva | #suriya | #dsp | #siruthaisiva | #thanthitv pic.twitter.com/jR8jofqqxP
— Thanthi TV (@ThanthiTV) November 15, 2024
இந்த நிலையில் படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தை அடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திரையரங்க உரிமையளர்களுக்கு சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.