கங்குவா : இரண்டு நாள் வசூல் குறித்து அறிவித்த படக்குழு..!
கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியானது. 10000க்கும் அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், படத்தின் கதை, திரைக்கதை பலவீனமாகவும், பின்னணி இசை மற்றும் வசனங்கள் இரைச்சல் மிகுந்ததாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியைப் பெறுவதற்காகத் தடுமாறி வருகிறது. அனைத்து மொழிகளிலும் படத்திற்கு எதிராக அதிகமான விமர்சனங்கள் வருவதால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தியடைந்துள்ளது. இந்த நிலையில், கங்குவா உலகளவில் இரண்டு நாளில் ரூ. 89.3 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Epic response for the EPIC 💥#Kanguva raging across cinemas with a 2 Day gross of 89.32 crores worldwide 🔥
— Studio Green (@StudioGreen2) November 16, 2024
Book your tickets here
🔗https://t.co/aG93NEBPMQ #KanguvaRunningSuccessfully @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @gnanavelraja007… pic.twitter.com/2dWb2RzQNI