‘கங்குவா’ இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தான் வெளியாகும் - தயாரிப்பாளர் தகவல் ..!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அண்மையில் அளித்த பேட்டியில், “கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. எழுதும்போதே 2 பாகங்களாக தான் எழுதப்பட்டது. தற்போது முதல் பாகம் முடிந்துள்ளது. இதற்கு 185 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் . தொடர்ந்து ‘கங்குவா’ இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு ஜனவரியில் அல்லது கோடைக்காலத்தில் வெளியாகும்” என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
#Kanguva is a Two Part Movie, Some Excitement is there For the audience to hook them into part 2.
— Prakash Mahadevan (@PrakashMahadev) July 9, 2024
👉 Part 2 shoot will happen next year end or Early 2026 planning to release in 2027 - Producer K. E. Gnanavel Raja in Latest Interview 👍#Suriya
pic.twitter.com/WNycEno6q7