கங்குவா படத்தின் “தலைவனே” பாடல் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்...
1730212805000
தமிழ் திரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சூர்யா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” என்னும் திரைப்படத்தில், இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “தலைவனே” என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

