அமீர் விவகாரத்தில் கார்த்தியிடம் கேள்வி எழுப்பும் கஞ்சாகருப்பு

அமீர் விவகாரத்தில் கார்த்தியிடம் கேள்வி எழுப்பும் கஞ்சாகருப்பு

பருத்திவீரன் பிரச்சனை சில நாட்களாக உச்சம் தொடவே பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.” என அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ரொம்ப பெரிய தவறு செய்துள்ளீர்கள் என்றும், நன்றி இல்லாமல் பேசியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க என கண்டித்து இருக்கிறார். களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அமீர் விவகாரத்தில் கார்த்தியிடம் கேள்வி எழுப்பும் கஞ்சாகருப்பு

இந்நிலையில், இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் நடிகர் கார்த்தி இது தொடர்பாக பேசாமல் இருப்பது குறித்து கஞ்சாகருப்பு காட்டமாக பேசியுள்ளார். என்ன மாமா சௌக்கியமா என சொல்லிக்கொடுத்த அமீரை மறந்துவீட்டீர்களா கார்த்தி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story