நள்ளிரவில் ஓடிடியில் வெளியானது கருடன்..! ரசிகர்கள் குஷி..!
1719973815000

கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான கருடன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.
விடுதலையை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமானார் சூரி.அந்த வகையில் வெற்றி மாறன் தயாரிக்க ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரால் இயக்கப்பட்ட "கருடன்" படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் சூரி.
ரூ.20 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் மொத்தமாக ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை சிம்ப்ளி சவுத் (Simply South) ஓடிடி தளத்திலும் காண முடியும்.