விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ படத்தின் டிரைலர் வெளியீடு.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக உள்ள விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், இவர்களோடு காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அதனால் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வெளியிடுகின்றனர்.
செல்லா அய்யாவு இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவ் ஸ்டண்ட் கோரியோகிராப் செய்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை எகிற வைத்துள்ளது.