சுழல் 2-ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌரி கிஷன்

சுழல் 2-ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌரி கிஷன்

‘குற்றம் கடிதல்’ மற்றும் ‘கிருமி’ படத்தின் இயக்குனர்களான பிரம்மா மற்றும் அனுசரண் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய வெப் தொடர் ‘சுழல்’. இந்த வெப் தொடருக்கு ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் பிரபலமான புஷ்கர் - காயத்ரி இணைந்து கதை எழுதியிருந்தனர். இந்த வெப் தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடரில் கதிர் போலீசாக நடித்துள்ளார்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் ஓடிடித்தளத்தில் வெளியான இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ‘சுழல்’ தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

சுழல் 2-ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌரி கிஷன்

இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் 96 பட புகழ் கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Share this story