‘கொட்டிக்கார பயலே’.. கெளதம் கார்த்திக் பட ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு !

1947August16

கெளதம் கார்த்திக்கின் ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இளம் நடிகரான கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘1947 ஆகஸ்ட் 16’. ப்ரீயட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை என்.எஸ்.பொன்குமார் எழுதிய இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரேவதி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

1947August16

 ஷான் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் முருகதாஸின் ஏ.ஆர்.முருகதாஸ் பிரொடக்ஷன், பர்பிள் புல் என்டர்டெயின்மெண்ட் மற்றும் காட் ப்ளஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்து வருகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டக்களத்தின் ஒரு பகுதியே இப்படத்தின் கதையாக உருவாகியுள்ளது. 

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘கொட்டிக்கார பயலே’ என தொடங்கும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரவெடியாய் வெடிக்கும் இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story