பழனி முருகன் கோயிலில் கெளதம் கார்த்திக் - மஞ்சிமா ஜோடி ... சாமி தரிசனம் செய்யும் வீடியோ வைரல் !

gautham karthik and manjima mohan

கெளதம் மேனன் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 

 மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.  தொடர்ந்து ‘என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவ், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 

gautham karthik and manjima mohan

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மலையாள நடிகை மஞ்சிமாவை கெளதம் கார்த்திக் காதலித்து வந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். பிரம்மாண்டமான நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

gautham karthik and manjima mohan

திருமணம் முடிந்து மூன்று மாதங்களான நிலையில் இந்த ஜோடி பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து கோயிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டனர். இது வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


 

Share this story