மஞ்சிமாவை கரம்பிடிக்கும் கௌதம் கார்த்திக்.. திருமண தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

gautham karthik and manjima mohan

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருக்கும் கௌதம் கார்த்திக், ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். தற்போது பிசியான ஹீரோவாக மாறிவிட்டார். அதேபோன்று சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘தேவராட்டம்’. இந்த படத்தின்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. 

gautham karthik and manjima mohan

இதைத்தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் தங்கள் காதல் குறித்து இவர்கள் வெளிப்படையாக கூறினர். இதையடுத்து இவர்களது திருமணம் வரும் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஜோடி இன்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது  எங்களது திருமணத்திற்கு உங்களின் ஆசீர்வாதம் தேவை. எங்களது திருமணம் சிறிய அளவில் குடும்ப நிகழ்வாக நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்போம். பின்னர் இருவர் காதல் கதை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த கௌதம் கார்த்திக், நான் தான் முதன் முதலில் காதலை சொன்னேன். அதன்பிறகு இரண்டு நாள் கழித்துதான் மஞ்சிமா ஒத்துக்கொண்டார். 

சரியான நபரை உன் வாழ்க்கையில் சந்தித்தால் வாழ்க்கை முழுமையடையும் என அப்பா கூறுவார். அப்படி நான் சந்தித்த நபர் மஞ்சிமா. தேவராட்டம் படத்தின் போது நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு எங்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதை விட நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் என்னை உற்சாகமூட்டுவார் என்று கூறினார்.  

Share this story