மண்வாசனை வீசும் ‘கோட்டிக்கார பயலே’.. கௌதம் கார்த்திக் பட ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16 1947 ’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிரொக்ஷன், பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் காட் ப்ளஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947 ’. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டக்களத்தின் ஒரு பகுதியே இப்படத்தின் கதையாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரீயட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை என்.எஸ்.பொன்குமார் எழுதிய இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரேவதி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள முதல் பாடலான ‘கோட்டிக்கார பயலே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பொன்குமாரே எழுதியுள்ள இந்த பாடலை மீனாட்சி இளையராஜா மற்றும் ஷான் ரோல்டன் இணைந்து பாடியுள்ளனர். மண் வாசனை வீசும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.