கெளதம் கார்த்திக்கின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் : புகைப்படங்கள் வைரல்..
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக், கிளீன் ஷேவ் உடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். முதல் படம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. அடுத்ததாக என்னமோ ஏதோ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான வை ராஜா வை படத்திலும் நடித்தார். முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம், பத்து தல, ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்களில் இதுவரை நடித்துள்ளார்.
இந்நிலையில், பத்து தல, ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களில் ரக்கட் பாயாக மீசை, கொஞ்சம் தாடி எல்லாம் வைத்து நடித்து வந்த கௌதம் கார்த்திக் தற்போது ஆர்யாவுடன் நடித்து வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக க்ளீன் ஷேவ் லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த லுக்குடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.