ராஜு முருகனுடன் கூட்டணி வைத்த கௌதம் கார்த்திக்

gautam karthik

தமிழில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கௌதம் கார்த்திக் கடைசியாக ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் இந்த வருடம் அவர் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஆனால் தற்போது 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 
 இந்த நிலையில் இன்று கௌதம் கார்த்திக் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பட அறிவிப்பை வெளியிட்டது அவர் நடிக்கும் 19வது படத்தின் படக்குழு. இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

ஜி.கே.19 எனத் தற்காலிகமாக அழைப்படும் இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன்
மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து  தயாரிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படம் வெளியாக படக்குழு தரப்பு முடிவு செய்துள்ளது. 

Share this story