கவுதம் மேனன், மம்மூட்டி இணையும் படம் ‘Dominic and The Ladies purse’

mammutty

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய மலையாளப் படத்துக்கு ‘Dominic and The Ladies purse’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் ‘‘Dominic and The Ladies purse’ மலையாளப் படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராகவும் அவர் அறிமுகமாகிறார். இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜையுடன் படத்தின் பணிகள் அண்மையில் கொச்சியில் தொடங்கின. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..Mammutty

இரவு உடையுடன், பெண்கள் உபயோகப்படுத்தும் பர்சை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார் மம்மூட்டி. அவரது அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்க, பூனை ஒன்றும் அவரை பின் தொடர்கிறது. பெண் ஒருவரின் ஹேண்ட் பேக் திறந்து கிடக்கிறது. பின்னணியில் சில நபர்களின் புகைப்படங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி ஹாலிவுட் பட போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஜேம்ஸ் பாண்ட் ‘007’ பட போஸ்டர் உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது மம்மூட்டி துப்பறிபவராக இருப்பார் என தெரிகிறது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக இருக்கும் என்பதை போஸ்டர் உறுதி செய்கிறது.
 

Share this story