யுனிவர்ஸை உருவாக்கும் திட்டம் உண்டு - கௌதம் மேனன்

யுனிவர்ஸை உருவாக்கும் திட்டம் உண்டு -  கௌதம் மேனன்

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல தனக்கும் தனி யுனிவர்ஸ் உருவாக்கும் திட்டம் உண்டு என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.வரும் நவம்பர் 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது.

யுனிவர்ஸை உருவாக்கும் திட்டம் உண்டு -  கௌதம் மேனன்

இந்நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படம் வெற்றி பெற்றால் இதனை வைத்து, தனி யுனிவர்ஸை உருவாக்கும் திட்டம் உள்ளது என படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றியை பொருத்து, இரண்டாம் பாகமும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Share this story