இனி நான் நடிக்கப்போவதில்லை - கௌதம் மேனன்

இனி நான் நடிக்கப்போவதில்லை - கௌதம் மேனன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் கவுதம் வாசுதேவ் மேனன். காதல், ஆக்‌ஷன் என கலவையான கதைகளில் படம் இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் அவரது இயக்கத்தில் வெளி வர உள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.

இனி நான் நடிக்கப்போவதில்லை - கௌதம் மேனன்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் இருந்தது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இனி நான் நடிக்கப்போவதில்லை - கௌதம் மேனன்

இதனிடையே இயக்குநர் கௌதம் மேனன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்நிலையில், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். தனக்கு நடிக்க தெரியாது என்றும், தான் ஒரு இயல்பான மனிதர் என்றும் தெரிவித்துள்ளார். தான் நடித்த படங்களில் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Share this story